ஏமாற்றிய கணவனைப் புதுமையாகப் பழிவாங்கிய மனைவி

238
Advertisement

தன்னை ஏமாற்றிய கணவனைப் புதுமையான முறையில்
பழிவாங்கிய மனைவியின் செயல், மனைவியை ஏமாற்றும்
கணவனுக்குப் பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது.

நம்மில் பலர் விலைமதிப்புள்ள சில பொருட்களை விற்கும்
ஏலத்தைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பெண்ணின்
கோபத்தை வெளிப்படுத்தும் ஏலத்தை நீங்கள் எப்போதாவது
பார்த்திருக்கிறீர்களா?

சமீபத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பெண்ணொருத்தி
ஏலத்தில் தனது திடீர்க் கோரிக்கைகளால் இணையம்
முழுவதும் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisement

ஜமில் மார்கரிட்டா கால்வேஷ் என்ற அந்தப் பெண் தன்னை
ஏமாற்றிய கணவனின் விலைமதிப்புள்ள சொத்துகளை
ஆன்லைனில் ஏலம்விட்டுள்ளார்.

கணவருக்குச் சொந்தமான பிராண்டட் ஆடைகளையும்
காலணிகளையும் ஏலத்தில் விற்பனை செய்தார். இந்தச்
சம்பவம் பேஸ்புக் நேரலையில் நடந்தது.

இந்த ஏலத்தின்மூலம் 3 லட்சம் பிலிப்பைன் பெசோக்களை ச
ம்பாதித்தார். இது இந்திய மதிப்பில் 4 லட்சத்து 38 ஆயிரத்து
624 ரூபாய்க்குச் சமம் ஆகும்.

”கணவனின் ஆடைகளைத் தூக்கியெறிவதைவிட அதன்மூலம்
பணம் சம்பாதிப்பேன் என்று கேலியாகக் கூறியுள்ளார் ஜமில்.
அந்த ஏலத்தை என் கணவர் பார்ப்பார். என்னென்ன பொருட்களை
விற்பனை செய்கிறேன் என்பதையும் அவர் பார்ப்பார்” என்று
தெரிவித்துள்ளார்.

”கணவனால் ஏமாற்றப்படும் பெண்கள் இதுபோன்று செய்ய
வாருங்கள்” என்றும் அந்தப் பெண் அறைகூவல் விடுத்துள்ளார்.

சரி, ஜமிலின் கணவன் அப்படி என்ன தப்பு செஞ்சாராம் தெரியுமா…

எஜமானியோடு போய்ட்டாராம்…..ஜமிலை விட்டுவிட்டு….