‘தமிழக’ வீரருக்கு நேர்ந்த கொடுமை SRHக்கு ‘ஆதரவாக’ செயல்பட்ட அம்பயர்?

IPL தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆடி வருகின்றனர். ஆரம்ப போட்டிகளில் ஆடும் லெவனில் சுந்தருக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து Google CEO சுந்தர் பிச்சை கூட,” எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது” என, அதிருப்தி தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். தன்னுடைய முதல் அரைசதத்தை பூர்த்தி செய்வதற்கு, அவருக்கு 1 ரன் தேவைப்பட்டது.

ஆனால் ஷமி வீசிய 14வது ஓவரில், அனிகெத் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போது அந்த அவுட் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வர்மா அந்த பந்தை பிடித்தபோது, பந்து தரையில் பட்டது Re Playவில் நன்கு தெரிந்தது.

ஆனால் 3வது அம்பயர் நிதி மேனன், கண்ணை மூடிக்கொண்டு அவுட் கொடுத்து விட்டார். இதனால் அநியாயமாக சுந்தர் தன்னுடைய அரைசதத்தை அடிக்கும் வாய்ப்பை இழந்து, மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், ” 3வது அம்பயர் ஹைதராபாத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, தமிழக வீரருக்கு அநியாயம் இழைத்து விட்டார். பந்து தரையில் படுவது நன்றாக தெரிந்தும் கூட, அம்பயர் இப்படி செய்தது சரியில்லை,” என்று, பலவாறாக நிதி மேனனை விமர்சனம் செய்து வருகின்றனர்.