Wednesday, December 17, 2025

ஆம்லெட் உடன் வாழைப்பழம் சாப்பிட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விஷாந்த் டிசோசா (52). இவர் சாலையோர உணவகத்தில் ஆம்லெட் உடன் வாழைப்பழத்தை முழுமையாக சாப்பிட்டு உள்ளார்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காசர்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது தொண்டையில் ஆம்லெட், வாழைப்பழம் சிக்கியதால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News