Saturday, December 27, 2025

தவறான ஊசியால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், கோபால் நர்சிங் ஹோமில், உடல் நிலை சரியில்லாத குழந்தைக்கு ஊசி போடப்பட்டது. ஊசி போட்ட பிறகு குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியது.

பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால், கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் நர்சிங் ஹோம் மீது புகார் அளித்தனர். புகாரின் பெயரில் விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

Related News

Latest News