நீலகிரி மாவட்டம், உதகை அருகே மாவனல்லா பகுதியில், கடந்த நவம்பர் 24ம் தேதி, பழங்குடியின பெண்ணை புலி அடித்து கொன்றது. இதனையடுத்து வனத்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, ஆங்காங்கே கூண்டுவைத்து புலியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், 15 நாட்களுக்கு மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய 14 வயது மதிக்கத்தக்க ஆண் புலியை உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆட்கொல்லி புலி வனத்துறையின் கூண்டில் சிக்கியதால் மாவனல்லா பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
