மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற அரசு என்று கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியை கடந்துவிட்டதாகவும், அந்த பணம் எங்கு சென்றது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அரசின் நிதி வளங்களை முதல்வரின் குடும்பம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துகிறது என்றும், அரசு ஊழியர்களின் பலன்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தி.மு.க. அரசு கூறும் முதலீட்டு தொகைகள் எங்கே சென்றது என்ற கேள்வியும் எழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றார்.
