மனிதரை ஓடஓடத் துரத்திய வாள் மீனின் வீடியோ
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாள் மீன்கள் கடற்கரையிலிருந்து 600 முதல் 800 மீட்டர்
ஆழத்தில் வாழ்கின்றன. கடலிலுள்ள மீன்களுள் சக்திவாய்ந்த
மற்றும் வேகமான மீன்களான அவை மனிதர்களைத்
தாக்கும் அல்லது கொல்லும் குணம்கொண்டவை.
அவற்றைப் பற்றி ஆய்வுசெய்ய விரும்பினார் ஒருவர்.
இதற்காகப் பிரேசில் கடற்கரையில் ஆழ்கடலில் 721 அடிக்கு
கீழே கடலின் அடிவாரத்தில் நடந்துசென்றார். அந்த ஆராய்ச்சி
யாளரை 5 அடி நீளமுள்ள வாள் மீன் ஒன்று தொடர்ந்து வந்து
துரத்தத் தொடங்கியது.
அவரது ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தாக்கத் தொடங்குகியபோது
சிலிண்டரில் சிக்கிக்கொண்ட அந்த வாள் மீன் தன்னை
விடுவித்துக்கொள்ள முயன்றது.
வாள் மீனின் தாக்குதலால் பயந்துபோன ஆராய்ச்சியாளர்
உடனே நீரின் மேல்மட்டத்துக்கு விரைந்து வரத் தொடங்கினார்.
என்றாலும், அவரைப் பின்தொடர்ந்து வந்து தாக்கியது.
சில ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த இந்த சம்பவம் தற்போது
இணையத்தில் உலா வருகிறது.