படுக்கையிலிருந்து எழுந்திருக்க விரும்பாத மாணவி வகுப்பறைக்கு மெத்தையுடன் சென்று அதிரவைத்துள்ளார்.
கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஒரு வருடத்துக்கும்மேலாக ஆன்லைன் கற்றலுக்குப் பிறகு, வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், காலையில் எழுந்திருப்பது இன்னும் கடினமாகிவிட்டது. அதன் விளைவுதான் இந்த மாணவியின் செயல்… கல்வியின்மீதுள்ள ஆர்வத்தால் என்ன செய்கிறார் பாருங்கள்…
டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில் பிரிட்டனைச் சேர்ந்த அந்த மாணவி தனது மெத்தை மற்றும் படுக்கையைப் பல்கலைக் கழக வகுப்பறைக்குள் கொண்டுசெல்கிறார். அதைக்கண்டு அங்குள்ள சக மாணவர்கள், ஆசிரியர்கள் திகைத்து நிற்க, அந்த மாணவியோ வெள்ளைக் கவுன், சாக்ஸ் அணிந்தபடி, படுக்கையில் படுத்து உறங்குகிறார்.
இந்தக் கல்வி நிறுவனம் லீசெஸ்டர்ஷையர் நகரில் உள்ள லாஃப்பரோ பல்கலைக் கழகமாக இருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ள இந்த வீடியோவைப் பார்த்த பலர் எல்லாம் லாக்டவுன் மகிமையோ மகிமை என்று விமர்சனம் செய்துவருகின்றனர்.
காலையில் எழுந்து வகுப்புகளுக்குச் செல்வதற்காக காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் வேதனையானது என்னும் உண்மையை ஒப்புக்கொள்வதுபோல உள்ளது இந்த மாணவியின் செயல்.
தூங்காதே தம்பி தூங்காதே… தூங்கிப்புட்டு பின்னாலே ஏங்காதே….பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது….
வேறென்ன சொல்ல…?
உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் ஒரே மனநிலையுடன்தான் இருப்பார்கள்போலும்.