https://www.instagram.com/reel/CVvfbmKt7QZ/?utm_source=ig_web_copy_link
ஈரமான தலைமுடியை உலரவைக்க இளைஞர் ஒருவர் செய்த செயல் வீடியோ வைரலாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் பிரஷர் குக்கரிலிருந்து வெளியாகும் நீராவியைப் பயன்படுத்தி ஈரமாக உள்ள தன்னுடைய தலைமுடியை உலர வைக்கிறார் ஒரு இளைஞர்.
ஹேர் டிரையருக்குப் பதிலாகப் பிரஷர் குக்கரை இளைஞர் பயன்படுத்தியது புதுமையான செயலாகத் தோன்றினாலும் ஆபத்தான செயலாகவும் உள்ளது.
புதுமை என்கிற பெயரில் சமையல்செய்யப் பயன்படுத்தும் பாத்திரத்தை வேறுநோக்கத்துக்காகப் பயன்படுத்தியதைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
குளித்தவுடன் உலர்ந்த டவலால் நன்கு தலையைத் துடைத்து உலரவைப்பதுதான் அனைவரின் வழக்கம். பலர் காற்றாடியை வேகமாக சுழலச்செய்து அதன்கீழ் நின்று உலர வைப்பர். பெண்களோ ஈரத் தலைமுடியை ஒரு டவலால் சுற்றிவைத்து சிறிதுநேரம் பொறுமை காப்பர். இன்னும் சில பெண்களோ தலைக்கு சாம்பிராணி புகைப்பிடிப்பர். இதனால் தலைமுடி நன்றாக உலர்ந்துவிடுவதுடன் ஜலதோஷம் ஏற்படாது. தலையில் நீர் கோர்க்காது.
ஆனால், குக்கரிலிருந்து வெளியான ஆவியில் தலைமுடியை இளைஞர் உலரவைத்தது பலரின் கவனத்தை ஈர்க்கவே என்கின்றனர் வலைத்தளவாசிகள்.