2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது :-
UnionBudget2026 வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?
விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி கோவை, மதுரை மெட்ரோ இரயில், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, புதிய இரயில்வே திட்டங்கள், நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.
இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
