சத்தியன் மகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பாடியவர். இவர் தமிழில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெற்றிப் பாடல்களை இவர் பாடியுள்ளார். “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற “கலக்கப் போவது யாரு”, “அறிந்தும் அறியாமலும்” திரைப்படத்தில் இடம்பெற்ற “சில் சில்”, மற்றும் “பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தின் intro song போன்ற பல வெற்றிப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் இவரே. இந்த சூழலில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும், அவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தாலும், இவரைப் பற்றிப் பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை.
பாடகர் சத்தியன், தனது திறமையை மேடைப் பாடகராகவே முதலில் வெளிப்படுத்தினார். அப்போது, சங்கரின் சாதகப் பறவைகள் மற்றும் லக்ஷ்மன் ஸ்ருதி போன்ற இசைக்குழுக்களுடன் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் 1999 ஆம் வருடத்தில் பாடிய ‘ரோஜா ரோஜா’ பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த பாடல், உன்னிகிருஷ்ணன் குரலில் ‘காதலர் தினம்’ திரைப்படத்தில் இடம் பெற்றது. ஆனால், சத்தியனின் இந்த மேடைப் பாடல் ரசிகர்களைக் கவர்ந்து, இன்று ட்ரெண்டிங் பாடலாக மாறியுள்ளது.
இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சத்தியன் பேசியது; “தான் 200க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருந்தாலும் எனக்கு சரியான அங்கீகாரமும் வாய்ப்பும் இப்போது இல்லாததால் 4 மாதம் தான் ஹோட்டலில் வேலை பார்த்தேன், என்றும் அதில் தனக்கு கிடைத்த கஷ்டங்கள் குறித்தும் கண் கலங்கி பேசி இருந்தார்.”இந்த நிலையில் தற்போது 1999 ஆம் ஆண்டு அவர் பாடிய ரோஜா ரோஜா பாடலும் இப்போது அவர் பாடிய பாடலும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வரும் நிலையில், பாடகர் சத்தியன் நன்றி தெரிவித்து தனது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.