Wednesday, March 12, 2025

பெண்களின் சமூக பொருளாதார நிலை மேம்பட வேண்டும் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

உலக மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் ஆற்றிய தனித்துவ பங்களிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவில் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் என்றும் புகழாரம் சூட்டினார். பல்வேறு இன்னல்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், பெண்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் பெண்களின் சமூக பொருளாதார நிலை மேலும் மேம்பட வேண்டும் என்றும், பெண்கள் சம வாய்ப்புகளை பெறும் வகையில், சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest news