இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாகவும், இது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் தவிர அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து நிரூபர்களிடம் அவர் கூறியதாவது : இந்தியாவில் பா.ஜ., அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. இந்திய வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு துறை மத்திய அரசால் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவருக்கு மட்டும் தெரியவில்லை.
ஒரு புறம் அமெரிக்கா கடுமையாக இந்தியாவை விமர்சிக்கிறது. மறுபுறம் சீனா உங்களை மிரட்டுகிறது. ஆனால் இந்திய வெளியுறவு துறை கொள்கை சிறப்பாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். இந்த நாட்டை எப்படி நடத்தி செல்வது என்று ஆளும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.