மதுரவாயலில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் மெட்ரோ வாட்டர் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இதனை சரி செய்வதற்காக சாலையில் பள்ளம் தோண்டி மெட்ரோ நிர்வாகம் மற்றும் மாநகராட்சி தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் சாலை மீண்டும் முழுமையாக சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.