Friday, January 30, 2026

“தமிழ்நாட்டில் கல்வித்தரம் மோசமாக உள்ளது” – ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில் நடைபெற்று வருகிறது. இந்த 2 நாள் மாநாட்டை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்துள்ளார்.

மாநாட்டில் உரையாற்றிய ஆர்.என். ரவி, தன்னுடைய பேச்சில் தமிழகத்தில் கல்வி தொடர்பான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “இந்த மாநாடு கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. உதகைக்கு வந்த ஒரு துணைவேந்தரை திருப்பியனுப்பியுள்ளனர். மேலும், பலர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என காவல்துறை மூலம் மிரட்டல் கொடுத்துள்ளனர்.” என அவர் தெரிவித்தார்.

“இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த மாநாட்டில் அதிக அளவு துணை வேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் கல்வியின் தரம் மோசமாக உள்ளது. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறைவாக உள்ளது.” என கூறியுள்ளார்.

Related News

Latest News