தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. அதன்படி முதல்நிலை சரிபார்ப்பு பணி இன்று தொடங்கி, ஜனவரி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுகின்றன
