லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் இன்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 1 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை தமிழ்நாட்டிலும் முன்பதிவு தொடங்குகிறது. இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.