கொடைக்கானலில், மலை வெள்ளைப்பூண்டுவின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட கொடைக்கானல் மலைப்பகுதிகளில், வெள்ளை பூண்டுகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட வெள்ளப்பூண்டு, தற்போது கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
