ஒரே ஒரு திராட்சைப் பழம் 35 ஆயிரம் ரூபாய்க்கும்,
ஒரு கொத்து திராட்சை ஏழரை லட்ச ரூபாய்க்கும் விற்கப்பட்டது
அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
தற்போது இந்த பழம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
திராட்சைப் பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
சீசன் நேரத்தில் விலை மலிவாகவும்,
சீசன் அல்லாத நேரத்தில் சற்று விலை அதிகமாகவும்
எடைபோட்டு விற்கப்படும் திராட்சைப் பழம்
ஜப்பானில் ஒரு கொத்து திராட்சையே அதிகமான விலைக்கு விற்பனையாகிறது.
ஜப்பானில் மட்டுமே விளையும் ரூபி ரோமன்
என்னும் ரகத்தைச் சேர்ந்த இந்த திராட்சைப் பழம்
ஒரு கொத்து 450 அமெரிக்க டாலர் என்கிற விலையில் விற்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இஷிகாவா மாகாணத்தில் உள்ள சந்தையில் மட்டுமே
இந்த ரக திராட்சைப் பழம் விற்கப்படுகிறது.
ரூபி ரோமன் திராட்சைப் பழம் உயர்ந்த தரமும்,
சிறந்த சுவையும், மாணிக்க சிவப்பு நிறமும்,
பெரிய வடிவமும் கொண்டு விளைகிறது.
ஒவ்வொரு திராட்சையும் PING PONG பந்தின்
அளவைப்போல பெரியதாக விளையும்.
விளைவதற்கு 14 ஆண்டுகள் ஆகும்.
ஒவ்வோராண்டும் 24 ஆயிரம் கொத்துகள் மட்டுமே விளைவிக்கப்படும்
இந்த விலை அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம்.
குறைந்த அளவே விளைவிக்கப்படுவதால்
இந்த வகை திராட்சையை விற்க இஷிகாவா நிர்வாகம்
கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விளைந்தபின் அதன் தரம், மாணிக்க நிற சிவப்பு போன்றவற்றைப்
பரிசோதித்து அவை உறுதிப்படுத்தப்பட்ட பிறகே சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன்பின்னரே, இந்த ரூபி ரோமன் திராட்சைகளை சந்தையில் விற்க முடியும்.
2020 ஆம் ஆண்டில் ஒரு கொத்து ரூபி ரோமன் திராட்சை
12 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் இந்திய மதிப்பு சுமார் ஏழரை லட்ச ரூபாய் ஆகும்.
இதனடிப்படையில் கணக்கிட்டால் ஒரே ஒரு திராட்சைப் பழத்தின்
விலை 35 ஆயிரம் ரூபாய் ஆகிறது.