Thursday, May 22, 2025

முடிவுக்கு வந்த ‘Play Off’ சான்ஸ் 6வது கோப்பை ‘கனவா’ போயிருச்சே?

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த Play Off வாய்ப்பு குறித்து, IPL நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் முதல் அணியாக குஜராத், 2வது அணியாக பெங்களூரு, 3வது அணியாக பஞ்சாப் ஆகிய 3 அணிகளும், தங்களின் Play Off வாய்ப்பினை உறுதி செய்துள்ளன.

மீதமுள்ள 1 இடத்திற்கு லக்னோ, டெல்லி, மும்பை என்று 3 அணிகள் போட்டி போடுகின்றன. சென்னை அணியுடனான தோல்வியால் நடப்பு சாம்பியன் கொல்கத்தா, Play Off வாய்ப்பினை இழந்து வெளியேறியுள்ளது. கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் அய்யரை வெளியேற்றியதே இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்தநிலையில் மீதமுள்ள 1 இடத்தை டெல்லி அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில் மும்பை அணி அடுத்ததாக டெல்லி, பஞ்சாப் அணிகளை எதிர்கொள்கிறது. Play Off சான்ஸ் என்பதால் டெல்லி எளிதாக விட்டுக் கொடுக்காது. இதேபோல டேபிளில் முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ள பஞ்சாப்பும் எளிதில் அடிபணியாது.

எனவே இந்த இரு போட்டிகளும் மும்பைக்கு அக்னி பரீட்சையாக மாறியுள்ளது. இதில் ஒரு போட்டியில் வென்று மற்றொரு போட்டியில் தோல்வி அடைந்தாலும், மும்பை தங்களின் Play Off கனவினை மறந்து வெளியேற வேண்டியது தான். அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் வெளியேறி இருப்பதும், மும்பைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதேபோல லக்னோ அணியிலும் அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஷர்துல் தாகூர், மயங்க் யாதவ் இருவரும் வெளியேறி விட்டனர். ரிஷப் பண்ட் தலைமையில் ஏற்கனவே தத்தளித்து வரும் லக்னோவுக்கு, இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மும்பை, லக்னோவைக் காட்டிலும் டெல்லி அணிக்குத்தான் Play Off சான்ஸ் கைகூடும் என்று தெரிகிறது. இதனால் இந்த 2025ம் ஆண்டில் எந்த அணி IPL கோப்பையை தட்டித் தூக்கும்?, என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது.

Latest news