மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் மெத்தையை வாகனமாக பயன்படுத்திய நபரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தை சேர்ந்த நவாப் ஷேக்கில், என்பவர், கட்டில் மெத்தையை காராக மாற்றி சாலையில் உலா வந்தார். இதுகுறித்த காட்சிகள் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான நிலையில் வாகன பிரியர்கள் மற்றும் வலைத்தளவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.