ஒரே நேரத்தில் 50 ஆம்லேட்டுகளை சாப்பிட்டு அசத்தியுள்ளார் ஒருவர்.
இணையம் பல வேடிக்கையான வீடியோக்களால் நிறைந்துள்ளது. அவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகின்றன. சிலசமயம் உத்வேகத்தைத் தருகின்றன. சிலசமயம் வேடிக்கையாக அமைந்து சிரிக்க வைக்கின்றன. அந்த வகையில் உத்வேகமும் சிரிப்பும் தரும் வீடியோவாக அமைந்துள்ளது இந்த வீடியோ.
அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமடைந்தவர் எஸ். ஆர். பொற்செழியன். இவர், சாப்பாட்டு ராமன் என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உணவு சாதனைகளைப் பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் ஒரே நேரத்தில் 50 ஆம்லேட்டுகளை சாப்பிட்டு இணையதளவாசிகளைக் கவர்ந்துள்ளார்.
நாட்டுக்கோழி முட்டை 50ஐ சாப்பிடும் சவால் என்கிற தலைப்பில் அவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
நாளொன்றுக்கு ஒரு முட்டைக்குமேல் சாப்பிட்டால் உடல் ஏற்றுக்கொள்ளாது என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ள நிலையில், 50 ஆம்லேட்டுகளை ஒருவரே ஒரே நேரத்தில் சாப்பிட்ட செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதிகம் சாப்பிட்டு உணவை வீணடிக்காதீர், போதுமானதைவிட அதிகம் சாப்பிட்டு உணவை வீணடிக்காதீர் என்று நெட்டிசன்கள் விமர்த்து வருகின்றனர்,