பீகாரில் உள்ள மதுபானி ரயில் நிலையத்தில் உத்தரபிரதேசத்தின் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பக்தர்கள் ரயிலில் இடம் கிடைக்காததால் ரயிலின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்ற முயன்றுள்ளனர். இதனால் அந்த பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.
இதையடுத்து ரயிலின் மீது கற்களை வீசி, ரயில் பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.