Thursday, December 25, 2025

தமிழ்நாட்டு மக்களுக்கு 4G நெட்வொர்க் பிரச்சனையே இருக்காது

பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27, 2025 அன்று BSNL நிறுவனத்தின் 4G சேவையை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார். இது விரைவில் 5G சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கும் ஒரு தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இது BSNL நிறுவனத்திற்கு ஒரு வளமான எதிர்காலத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ச்சியாக கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், BSNL தனது அதிவேக நெட்வொர்க் வசதிகளும் குறைந்த விலை கட்டணங்களும் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 2025க்குள், மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் BSNL தனது 5G சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 19 தொலைத்தொடர்பு டவர்கள் 4G வசதிக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சேலம், கடலூர், வேலூர், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களும் 4G சேவைக்குள் கொண்டுவரும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2G சேவை உள்ள 222 இடங்களில் புதிய 4G டவர்கள் அமைக்கப்படவிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, 35 இடங்களில் உள்ள ஏற்கனவே உள்ள வசதிகளை 4G வசதியாக மேம்படுத்த BSNL திட்டமிட்டுள்ளது.

Related News

Latest News