Wednesday, February 4, 2026

அதிக பாரம் தாங்காமல் நடுரோட்டில் உடைந்த லாரி., உயிர் தப்பிய நபர்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளறடை கோவிலூர் வழியாக, ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நேற்று மாலை விபத்தில் சிக்கியது. அதிக பாரம் ஏற்றப்பட்டிருந்த அந்த லாரி சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பாரம் தாங்க முடியாமல் லாரியின் பின்பகுதி சரிந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்து நடந்த அதே நேரத்தில், அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்தின் காரணமாக, லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஜல்லி கற்கள் சுக்குநூறாக உடைந்து சாலை முழுவதும் பரவி கிடந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News