Wednesday, April 2, 2025

ஆஸ்கர் விருதுகளை குவித்த அனோரா திரைப்படம்

சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என 5 ஆஸ்கர் விருதுகளை அனோரா திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஏட்ரியன் ப்ராடியும், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை மிக்கி மேடிசனும் தட்டி சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில், 97வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் சிறந்த அனிமேஷன் படமாக Flow தேர்வு செய்யப்பட்டது. சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை In the shadow of the cypress தட்டி சென்றது.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை, A real Pain படத்திற்காக கீரன் கல்கின் வென்றார். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை, Emilia Perez படத்திற்காக zoe saldana தட்டி சென்றார். சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது Peter இயக்கிய conclave படத்திற்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது Anora திரைப்படத்திற்காக Sean baker-க்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளராக Wicked திரைப்படத்திற்காக paul Tazewell தேர்வு செய்யப்பட்டார். சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான விருதை, the substance தட்டி சென்றது. dune திரைப்படத்தின் 2ம் பாகம், Best sound, best visual effects என 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சனையை மையமாக வைத்து உருவான NO Other land சிறந்த ஆவணப்படமாக அறிவிக்கப்படுள்ளது. சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை I’M Not a robot தட்டி சென்றது. the brutalist திரைப்படத்திற்காக lol crawleyக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

Latest news