கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் முதியவர் ராதாகிருஷ்ணன். இவருக்கும் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் ஒரு சேவலால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சேவல் நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு கூவுவதால், தூங்க முடியாமல் ராதாகிருஷ்ணா அவதிப்பட்டுள்ளார்.
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான ராதாகிருஷ்ணா அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த முதியவரைப் பாதிக்காத வகையில், மாடியின் தெற்குப் பகுதியில் சேவலுக்கு தனிக் கூடாரம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
தூக்கத்தைக் கெடுத்த சேவல் மீது புகார் கொடுத்த விவகாரம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.