Tuesday, August 19, 2025
HTML tutorial

ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது – மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்

மக்களவையில் ரயில்வே துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது என்றும் ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது எனவும் கூறினார்.

லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது ஓராண்டில் 234 ரயில் விபத்துகளும், 464 ரயில் தடம்புரளும் சம்பவங்களும் நேரிட்டன. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 165 ரயில் விபத்துகளும் 230 ரயில் தடம்புரண்ட சம்பவங்களும் நிகழ்ந்ததாகவும் அவர் பட்டியலிட்டார். மல்லிகார்ஜுன கார்கே ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 118 விபத்துகளும் 263 ரயில் தடம்புரளும் சம்பவங்கள் நிகழ்ந்தன.

தற்போது ஆண்டுக்கு 30 ரயில் விபத்துகளும் 43 ரயில் தடம்புரளும் சம்பவங்களும் மட்டுமே நிகழ்கின்றன என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்தியாவை விட ஐரோப்பிய நாடுகளில் ரயில் பயணக் கட்டணம் 5 முதல் 20 மடங்கு அதிகமாக உள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News