உருண்டைத் திப்பிலியின் உன்னதம்

293
Advertisement

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து
உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ்
இன்னும் பல்மடங்கு வீரியமாகப் பரவி வருகிறது.

மன்னர்களின் படையெடுப்புபோல முதல் அலை, இரண்டாம்
அலை, மூன்றாம் அலை, நான்காம் அலை என்று அலையலையாகப்
பரவி வருகிறது.

இந்த வைரஸ்-ஐக் கட்டுப்படுத்தும் மருந்து அலோபதி மருத்துவத்தில்
இதுவரைக் கண்டறியப்படவில்லை. தடுப்பூசி கண்டயறிப்பட்டு
பயன்பாட்டில் உள்ளபோதும், தடுப்பூசி செலுத்திக்கொண்டோரையும்
தொற்றி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கோவிட் 19 வைரஸ்.

பல்வேறு மருந்துகள் கோவிட் 19 வைரஸிலிருந்து விடுபடுவதற்காகத்
தரப்பட்டாலும் முழுமையான பலன்கள் கிடைத்தபாடில்லை.

இந்நிலையில், சித்த மருந்துகள் கோவிட்19 வைரஸிலிருந்து
விடுவிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. கொரோனா முதல்
அலையின்போது சித்த மருந்துகள் பயன்படுத்தி பெரும்
எண்ணிக்கையில் தொற்றிலிருந்து பலர் விடுவிக்கப்பட்டனர்.

தற்போதும் வருமுன் காப்போம் நடவடிக்கையாகக் கபசுரக்
குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுரக் குடிநீர் குடித்த பலர்
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவும் வேகம் அதிகரித்துவரும் நிலையில்
ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த சித்த மருந்துகளை
உட்கொண்டு, கொரோனா பயமில்லாமல் உள்ளனர்.

இந்த வரிசையில் கொரோனா தொற்றாமல் இருப்பதற்கும்,
தொற்றினால் அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது உருண்டைத்
திப்பிலி.

திப்பிலியைப் பற்றி அனைவரும் அறிவர். திப்பிலியில் அரிசித்
திப்பிலி, கண்டத் திப்பிலி என இரு வகை உள்ளது. திப்பிலிச்
செடியின் வேர் உலரவைக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு
பயன்படுத்தத் தொடங்கினால் அது கண்டத் திப்பிலி.

திப்பிலிச் செடியின் பழம், முதிராத திப்பிலித் தண்டை உலர்த்திப்
பயன்படுத்தினால் அது அரிசித் திப்பிலி.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக்கட்டு, கோழை
போன்றவற்றைக் குணப்படுத்த திப்பிலி பயன்படுகிறது.

காய்ந்த திப்பிலியை சுத்தம் செய்து, நெய்யிட்டு வறுத்து
நன்கு பொடிசெய்து கால்முதல் அரை தேக்கரண்டிவரை
தேன் கலந்து குழப்பி காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு
வந்தால், உடனே தொண்டைக் கட்டு, கோழை, கரகரப்பு,
நாக்கு சுவையின்மை ஆகியவை தீரும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து
பொடிசெய்து தினமும் அரை தேக்கரண்டி அளவு எடுத்து அதனைத்
தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், வயிற்று வலி
ஆகியவை தீரும்.

திப்பிலியை சுட்டு அதன் புகையை வாய்வழியாவும், மூக்கு
வழியாகவும் சுவாசித்தால் கொரோனா தொற்று ஏற்படாமல்
காத்துக்கொள்ளலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

தற்போது இந்த முறையைப் பலர் பின்பற்றி கபம் தொடர்பான
நோய்கள் மட்டுமன்றி, கொரோனாவுக்கும் தீர்வுபெற்று வருகின்றனர்.

கையில் மருந்திருக்க, கொரானோ பயம் எதற்கு?