https://www.instagram.com/reel/CbesTqkF-1f/?utm_source=ig_web_copy_link
மணமேடையில் மணமகளைப் பார்த்ததும் அழத் தொடங்கிய புது மாப்பிள்ளையின்
வீடியோ அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
திருமணம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு
வாய்ந்த நாட்களில் ஒன்றாகும். இதுபோன்ற மனதைக் கவரும் ஒரு தருணம் அண்மையில்
நிகழ்ந்தது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
அந்தத் திருமண சுப நிகழ்வில், மணமேடையில் மணமகளின் அருகில் அமர்ந்திருந்த மணமகன்
திடீரென்று அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் சிந்தத் தொடங்கினார். உணர்ச்சிகரமான அந்தச்
சூழலில் மணமகள் தனது வருங்காலக் கணவரைப் பார்த்துக்கொண்டே சிநேகத்துடன் புன்னகைப்
பூக்கத்தொடங்கினாள்.
அதைத் தொடர்ந்து அழுகையை நிறுத்திய புது மாப்பிள்ளை சற்று நேரத்தில் மனைவியாகப்போகும்
மணமகளின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டார்.
மணமக்களின் இந்தப் பந்தம் காண்போர் அனைவரையும் ஆனந்தக் கண்ணீர் வரவைத்துவிடுகிறது.