நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினவிழாவை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.மேலும், தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தன. ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல் பல்வேறு இடங்களில் கட்சி தலைவர்களிலும், பிரமுகர்களும், பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர் ..
இந்த நிலையில் சின்னதாக ஒரு நினைவூட்டலை பார்க்கலாம்!!
இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. அன்று நள்ளிரவில் இந்தியா விடுதலை கிடைத்தது..அன்றுதான் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று, ஒரு சுதந்திர நாடாக மாறியது. மேலும், அதே ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல்,1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தேதிகளையும், கிழமைகளையும் 79 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 2025 ஆகஸ்ட் மாதம் ஒரே மாதிரி அமைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால்1947 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு காலண்டரில்,விசித்திரமான ஒன்றைக் கவனித்தீர்களா?
அதாவது, ஆகஸ்ட் 15 விடுமுறை அல்ல.ஆகஸ்ட் 18 அன்று என்ன விடுமுறையாக இருந்திருக்கும்?.ஒரு வேலை,இந்த காலண்டர் 1946 இல் அச்சிட பட்டிருக்கலாம்.உங்களுக்கு தெரிந்த கமெண்ட்ஸ் ல சொல்லுங்க!!