ஆளே இல்லாத மைதானத்தில் அரை மணி நேரம் பேசிய அமைச்சர்

சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் விருந்தினர்கள் அமரும் வகையில் மட்டும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் அமர பந்தல் அமைக்கவில்லை. இதனால் அவர்கள் சற்று தொலைவில் இருந்த மரத்தடி நிழலில் ஒதுங்கி நின்றனர். இதன் காரணமாக மைதானம் ஆளே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

இதையடுத்து ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். அரை மணி நேரம் பேசி முடித்த பின்னர் விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார்.

Related News

Latest News