Tuesday, December 3, 2024

கர்ப்பிணிப் பெண்ணின் கல்லீரலுக்குள் கரு… மருத்துவ அதிசயம்

https://www.facebook.com/watch/?v=464868671732883

ஒரு பெண்ணின் கல்லீரலுக்குள் கரு வளர்வது அப்பெண்ணையும் மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கர்ப்பம் என்பது ஒரு பெண் கடக்க வேண்டிய கடினமான கட்டங்களுள் ஒன்றாகும். ஒரு குழந்தையை 9 மாதங்கள் உடலுக்குள் சுமந்துசெல்வது மிகவும் கடினமானது.
கர்ப்பமுற்றிருக்கும் பெண் உடலளவிலும் மனதளவிலும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம். ஆனால், அவற்றையும் தாண்டி விநோதமான சிக்கலை எதிர்கொண்டுள்ளார் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்.

33 வயதாகும் அந்த கர்ப்பிணிப் பெண், தான் கர்ப்பமுற்ற 49 ஆவது நாளில், தனக்கு மாதவிடாய் உதிரப்போக்கு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவனையில் அந்தப் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், கர்ப்பப்பையில் வளரவேண்டிய கரு கல்லீரலில் வளர்வதைக் கண்டு அதிர்ச்சியின் உச்சிக்கே போனார்.

அந்தத் தகவலைக் கர்ப்பிணிப் பெண்ணிடம் சொன்னபோது அவரும் பெரிய அதிர்ச்சிக்குள்ளானார்.

தனது மருத்துவ அனுபவத்தில் இதுவரை இப்படியொரு நிகழ்வைப் பார்த்ததே இல்லை என்கிறார் அந்தப் பெண்ணைப் பரிசோதித்த டாக்டர்.

கர்ப்பப்பையில் வளரவேண்டிய கரு வழக்கமான இடத்துக்குப் பதில் வெளியே கல்லீரலில் வளர்வதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த விசித்திரமான கல்லீரல் கர்ப்பம் மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!