முகத்தில் கேக் தடவியதால் திருமணமான மறுநாளே விவாக ரத்து கோரியுள்ள சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள்தான் அந்த தம்பதிக்குத் திருமணம் நடந்துள்ளது. மறுநாளே விவாகரத்து கேட்டு அதிரவைத்துள்ளார் அந்த புதுமணப் பெண்.
என்ன நடந்ததென்று ஸ்லெட் ஆங்கில இதழ் பரபரப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் அந்த மணப்பெண், நான் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதேசமயம் திருமணத்தை எதிர்க்கவும் இல்லை. 2020 ஆம் ஆண்டில் எனது காதலன் திருமணத்தை முன்மொழிந்தபோது நான் அதனை எதிர்க்கவில்லை.
நாங்கள் இருவரும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதில் பாதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம்.
நான் வைத்த ஒரே நிபந்தனை….திருமணத்தன்று எனது முகத்தில் கேக் பூசக்கூடாது என்பதுதான்.
ஆனால், அவரோ என் தலையின் பின்புறத்தைப் பிடித்து என் முகத்தில் கேக்கைப் பூசிவிட்டார். எனவே, விவாக ரத்துக் கோரியுள்ளேன் என்று கூறியுள்ளதோடு,விவாக ரத்து கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதற்கான காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு கார் விபத்து ஏற்பட்டது. அப்போது என்னை கேக்கில் தள்ளிவிட்டனர். என்னை நீண்டநேரம் அங்கேயே நீண்டநேரம் வைத்திருந்ததால், நான் முற்றிலும் பீதியில் உறைந்துவிட்டேன்.
அன்றிலிருந்து மூடிய இடத்தைக் காணும்போதெல்லாம் எனக்குப் பயம் வந்துவிடும். அதனால்தான் திருமணத்தன்று என் முகத்தில் கேக் பூச வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். என் காதலனோ அதை மீறிவிட்டார். அதனால் விவாக ரத்து கோரியுள்ளேன் என்கிறார் அந்த புதுமணப் பெண்.
திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு பெரிய மைல்கல். ஆனால், அந்த சிறப்பு நாள் வரும்போது சில எதிர்பாராத நிகழ்வு எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.