காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி தேமுதிக சார்பில் “உள்ளம் தேடி இல்லம் நாடி” நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இரும்பு கரம் கொண்டு நிச்சயம் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
திமுக ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பிரேமலதா, திமுக ஆட்சியில் நிறையும், குறையும் சமமாக உள்ளது என்றும் அதனால் நூற்றுக்கு 50 மதிப்பெண் அளிப்பதாக பதில் அளித்தார். திமுக ஆட்சியில் நல்லதும் கெட்டதும் சரிசமமாக இருப்பதால் இந்த மதிப்பெண் கொடுத்ததாக கூறினார்.