Sunday, December 28, 2025

காவல் நிலையத்தில் பணம் கேட்டு பிரச்சனை செய்த ஆசாமி

கோயம்பேடு காவல் நிலையத்தில் மது குடிக்க பணம் கேட்டு பிரச்சனை செய்த போதை ஆசாமியை அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

சென்னை கோயம்பேடு கே 10 காவல் நிலையத்தில் போதை ஆசாமி ஒருவர் 150 ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்தார். மது குடிப்பதற்காக பணம் வேண்டும் என தகராறு செய்த அவரை பெண் காவல் உதவி ஆய்வாளர் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சிறிய கத்தியை கொண்டு பெண் காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றார். சக காவலர்கள் அதட்டியதால் அச்சமடைந்த போதை ஆசாமி உடனே தனது கையில் இருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

ரத்தம் வடிந்த அவருக்கு முதலுதவி செய்த காவல்துறையினர் தேநீர் குடிப்பதற்காக 20 ரூபாய் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related News

Latest News