https://www.instagram.com/p/CUcPzcwIOFb/?utm_source=ig_web_copy_link
தனது பலத்தால் உலகத்தையே திகைக்க வைத்துள்ளார் கலாட்ஸி.
எருமையை சுமந்துசெல்லும் அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் நாட்டில் வசித்து வரும் டிமிட்ரோ கலாட்ஸி என்ற இளைஞர் 150 கிலோ எடையுள்ள எருமை மாட்டைத் தனது தோளில் சுமந்து காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறார்.
எருமை மட்டுமல்ல, குதிரை, ஒட்டகம், யானை உள்ளிட்ட பிற விலங்குகளையும் சுமக்கும் வீடியோக்களை டிமிட்ரோ தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுவரை 63 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் 41 வயதாகும் 126 கிலோ எடையுள்ள இந்த வலிமையான வீரர். இவரது அபாரத் திறமையைக் கண்டு நண்பர்கள் பீம் என அழைக்கின்றனர்.
பல கதைகளை எழுதியுள்ள கலாட்ஸி பல இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார். திரைப்படத்திலும் நடித்துள்ளார்.