கடத்தல்காரனிடமிருந்து TikTok மூலம் தப்பித்த சிறுமி

273
Advertisement

TikTokஐப் பயன்படுத்தி ஒரு டீனேஜ் பெண் கடத்தல்காரனிடமிருந்து தப்பித்துள்ள செயல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த- தனக்கு நன்கு பழக்கமான 16 வயது சிறுமியை 61 வயது ஆசாமி ஒருவன் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாகக்கூறி காரில் கடத்திக்கொண்டு சென்றிருந்தான்.

தான் கடத்தப்பட்டுச் செல்கிறோம் என்பதை உணர்ந்த அச்சிறுமி பதற்றம் அடையாமல் சிந்தித்து செயல்பட்டு டிக்டாக் செய்கைகளைக் காருக்கு வெளியே செய்து காண்பித்தாள்.
சிறுமியின் செய்கைகளைக் கவனித்த அவ்வழியே சென்ற ஒருவர், சிறுமி ஆபத்திலிருப்பதைப் புரிந்துகொண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட்ட காவல்துறையினர் கடத்தல்காரன் சென்றுகொண்டிருந்த வாகனத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது கடத்தல்காரன் அச்சிறுமியுடன் லண்டனில் பயணித்துக்கொண்டிருந்தான்.

அப்பகுதியிலிருந்த காவல்துறையினர் உடனடியாகக் காரை நிறுத்திக் கடத்தல்காரனைக் கைதுசெய்து சிறுமியை விடுவித்தனர்.

டிக்டாக் செயலி வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பலரின் திறமையையும் வெளிக்கொணரும் தளமாகவும் உள்ளது. அந்த வகையில், சிறுமியின் புத்திசாலித்தனமும் பதற்றம் அடையாத குணமும் டிக்டாக்கை சமயோசிதமாகப் பயன்படுத்தச்செய்து வக்ர புத்திக்காரனிடமிருந்து தப்பிக்க உதவியுள்ளது.