உலகின் மிகப்பெரும் T20 தொடராக இந்தியாவின் IPL திகழ்கிறது. 10 அணிகளுடன் உலகின் தலைசிறந்த வீரர்கள் இதில் களம் காணுகின்றனர். BCCIயின் விதி காரணமாக, பாகிஸ்தான் தவிர்த்து மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் விளையாடி வருகின்றனர்.
இதேபோல ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளும் T20 தொடரினை நடத்துகின்றன. என்றாலும் IPL தொடரே T20 தொடரின் பேரரசனாக கிரிக்கெட் உலகினை ஆண்டு வருகிறது.
இந்தநிலையில் இந்தியாவின் இந்த தொடருக்கு ஆப்படிக்கும் வேலையை, குட்டி நாடான சவூதி அரேபியா ரகசியமாக மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நாட்டின் SRJ ஸ்போர்ட்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம், இந்த தொடரை முன்னின்று நடத்த, இதற்கு சவூதி அரசும் உதவிகளை தாராளமாக வாரி வழங்கி வருகிறதாம்.
இதற்காக சுமார் 4300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாம். IPL போலவே இத்தொடரிலும் மொத்தம் 8 அணிகள் இடம்பெறுமாம். இந்த 8 அணிகளையும், உலகின் தலைசிறந்த நிறுவனங்களை வாங்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனராம். ஏலத்தில், ஒரு அணி 150 கோடி வரை பயன்படுத்தலாம் என்றும், ஒரு வீரருக்கு தாரளமாக 50 கோடி வரை ஏலத்தில் கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.
இது மட்டுமின்றி பிக்பாஸ், The 100 மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகிய T20 தொடர்களை, முடிவுக்கு கொண்டு வந்து அவர்களையும் இதில் பங்குபெற வைக்கப் போகின்றனராம். ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் BCCI மீது செம காண்டில் இருப்பதால், இதற்கு அவர்கள் Green Signal கொடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தொடரை உலகின் மாபெரும் T20 தொடராக மாற்றுவதற்கு தேவையான, அத்தனை விஷயங்களையும், சவூதி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செய்து வருகிறது. இதற்காக கிரிக்கெட் ஆலோகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், முன்னாள் வீரர்கள் என பலரையும் இதில் ஆலோசகராக நியமித்து வருகின்றனராம்.
அதிர்ச்சி அளிக்கும் விதமாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் Pat Cummins இந்த குழுவில் இடம்பெற்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. IPL தொடரின் ஒரே வெளிநாட்டு கேப்டனாக இருக்கும் Cumminsஐ மாற்ற வேண்டும் என்று, ரசிகர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. சரியாக இந்த நேரத்தில் அவரின் மறுபக்கம் குறித்து தெரிய வந்துள்ளது.
இதனால் விரைவில் மீண்டுமொரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என்று, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விரைவில் IPL தொடர் துவங்குகிறது. இந்த நேரத்தில் சவூதி அரேபியாவின் T20 தொடர் குறித்த தகவல், கிரிக்கெட் வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
குறிப்பாக BCCI சவூதியின் இந்த அதிரடி முயற்சியால் ஆடிப்போய் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் 140 கோடிக்கும் அதிகமான இந்திய நாட்டில் உள்ள, கிரிக்கெட் ரசிகர்கள் போன்று உலகின் வேறு எந்த நாட்டிலும் வெறித்தனமான ரசிகர்கள் கிடையாது. எனவே தலைகீழாக நின்றாலும், IPLஐ வீழ்த்திட நினைக்கும் சவுதியின் முயற்சிகள் பலிக்காது என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
மேற்கண்ட அத்தனை விஷயங்களையும் சவூதி பார்த்துப்பார்த்து செய்தாலும், இதற்கு ICCயின் அனுமதி வேண்டும் என்பது கவனித்தக்கது. தற்போது ICC தலைவராக இந்தியாவின் ஜெய்ஷா தான் இருக்கிறார். எனவே IPLஐ வீழ்த்தும் ஒரு முயற்சிக்கு அவர் அனுமதி வழங்குவாரா? என்பது கேள்விக்குறி தான்.
இதுமட்டுமின்றி IPL தவிர்த்து பிறநாடுகளின் T20 தொடர்களில், இந்திய வீரர்கள் பங்கேற்க BCCI அனுமதிப்பதில்லை. இந்திய வீரர்கள் இல்லாத T20 தொடர்கள் பத்தோடு பதினொன்றாகவே உள்ளன. மேற்கண்ட இந்த 2 விஷயங்களையும் சவூதி கையாளும் விதத்தில் தான், இந்த புதிய T20 தொடரின் எதிர்காலம் அமையக்கூடும்.
என்றாலும் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதால், இந்த T20 விஷயத்தில் என்ன நடக்கப்போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.