https://www.instagram.com/reel/CZ9ME9Xoazg/?utm_source=ig_web_copy_link
கோபமடைந்த காட்டெருமைக் கூட்டத்தைப் பார்த்து
பயந்துபோன ஆப்பிரிக்க சிங்கம், அவற்றிலிருந்து
தப்பிக்க மரத்தின்மேல் ஏறும் வீடியோ இணையத்தில்
வைரலாகி வருகிறது.
கொடூரமான சிங்கம் ஒன்று, காட்டெருமைக் கூட்டத்துக்குப்
பயந்து மரத்தில் ஏறிவிட்டது. அதன் உச்சிக்கும் செல்ல
முடியாமல், எருமைக்கூட்டத்தால் உயிருக்கு நேரும்
ஆபத்தால் கீழிறங்கவும் முடியாமல், மரத்தை உறுதியாகப்
பற்றிக்கொள்ளவும் முடியாமல் பரிதவிக்கிறது.
யாராவது வந்து தன்னைக் காப்பாற்றிவிட மாட்டார்களா
என்கிற எதிர்பார்ப்போடு உள்ளதுபோல் சிங்கத்தின் நிலை
உள்ளது. மரத்தின் மீதான அதன் பிடியோ உறுதியாக இல்லை
என்பதால், கீழே சறுக்கிக்கொண்டே வருகிறது.
ஆனாலும், உயிர் பயத்தில் மரத்தை தன் கால்நகங்களால்
இறுகப் பற்றிக்கொண்டுள்ளது.
எருமைக்கூட்டத்தின் ஆவேசத்தைப் பார்த்து கதிகலங்கிப்போன
அந்தச் சிங்கம் மூச்சுவிடக்கூட சிரமப்படுவதுபோலத் தெரிகிறது.
காட்டு ராஜா அதன் இரையைக்கண்டு பயந்துபோன இந்த
சம்பவம் நெட்டிசன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேசமயம், மரத்தின்மீது ஏறி எதிரிகளிடமிருந்து தப்பியுள்ள
இந்த சம்பவம் சிங்கத்தின் துணிச்சலை நம்புபவர்களுக்கு
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.