Friday, August 8, 2025
HTML tutorial

காலிஸ்டேமான் சிட்ரினஸ்
மலர்கள் நடுவே சிலுவை ஒளி

காலிஸ்டேமான் சிட்ரினஸ் மலர்கள் நியூசிலாந்து
நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இவ்வகைப் பூக்கள் ஜுன் மாதம் முதல் ஜுலை
மாதம் வரை செழிப்பாகப் பூக்கும்.

நீண்ட இலைகளுடன் வளரும் இந்தச் செடியில் அடர்
இளஞ்சிவப்புப் பூக்கள் கொத்துக்கொத்தாக அந்த
இரண்டு மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

வறட்சியைத் தாங்கி செழிப்பாக வளரும் இந்தச்
செடியில் மலரும் இவ்வகைப் பூக்கள் ரசிப்பதற்கு
மட்டுமே பயன்படுகிறது என்று கூறப்படுகிறது.

என்றாலும், இந்தப் பூவின் நிறம் இயேசுவின் ரத்தம்
என்று கிறிஸ்துவர்களால் கருதப்படுகிறது. இந்த மலரின்
நடுவே சிலுவைபோலக் காணப்படுகிறது. இது கிறிஸ்துவின்
ஒளி என்று அழைக்கப்படுகிறது.

அதைப் பார்க்கும்போது, ”கர்த்தராகிய இயேசுவே! என்
குடும்பத்துக்கு வெளிச்சம் தந்தருளும். மிகவும் விலையுயர்ந்த
உங்கள் இரத்தத்தால் ஞானம்பெற மற்றொரு குடும்பத்துக்கு
அனுப்புங்கள். ஆமென் என்று சொல்லுங்கள்” என்று பிரார்த்தனை
செய்வதுபோல உள்ளது.

இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் மிகவும்
சுவையாகவும் மணமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்நாட்டுப் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு
வருவதாகக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News