Wednesday, May 14, 2025

தங்கத்தின் ராஜ்யம் முடிஞ்சுது… இப்போ இது தான் பளபளக்கும் மன்னன்!

தங்கத்தின் விலை சரிகிறது… ஆனால் இதற்குப் பின்னால் ஒரு பெரிய மாற்றம் நடக்க போகிறது என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை!

சென்னையில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ₹9,661-க்கும், 22 கேரட் ₹8,856-க்கும், 18 கேரட் ₹7,296-க்கும் விற்கப்படுகிறது. ஆனால் இதேநேரத்தில் வெள்ளி விலை மட்டும் மந்தமாகவே உள்ளது — ஒரு கிராம் வெள்ளி ₹108.90… ஒரு கிலோ வெள்ளி ₹1,08,900 ஆக இருக்கின்றது.

இதுபோல் வெள்ளி விலை பார்ப்பதற்கே  குறைவாக உள்ளது போல தோன்றலாம். ஆனால் சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இனி வெள்ளிதான் பளிச்சுன்னு பாயப்போகிறது! என்கிறார்கள்.

ஏனெனில் தங்கம்-வெள்ளி விகிதம் கடந்த சில மாதங்களில் 100-ஐ தாண்டி, இப்போது 126-ஐ எட்டியுள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்கும் பணத்தில் 126 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடிகிறது. இதெல்லாம் 2020 கோவிட் நெருக்கடிக்கு பிறகு தான் மீண்டும் நடந்துள்ளது.

வரலாற்று தரவுகளின்படி இந்த விகிதம் சராசரியாக 68-க்கும், கடந்த பத்து வருட சராசரி 85-க்கும் இருக்க வேண்டியது. இது இப்போது 126 ஆகஇருப்பது மிகப்பெரிய வேறுபாடாக இருக்கிறது . இதன் அர்த்தம் என்னவென்றால் — வெள்ளி தங்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதே ஆகும்.

இந்த நிலை  நீண்ட நாட்கள் நீடிக்காது என்பதே வல்லுனர்களின் கணிப்பு. இதனால் வெள்ளி விலை விரைவில் உயர்ந்து, தங்கத்துடன் உள்ள விலைவித்தியாசத்தை குறைக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் தங்கம் 260% லாபம் கொடுத்திருக்க, வெள்ளி வெறும் 60% மட்டுமே கொடுத்திருக்கிறது. இதிலிருந்து சமன்செய்யும் காலம் தற்போது வந்துவிட்டது.

இதற்கு ஆதாரமாக தற்போது தங்கத்தின் விலையிலேயே பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் தங்கத்தின் விலை ₹2,500-க்கும் மேலாக சரிந்து விட்டது. ஒரு அவுன்ஸ் தங்கம் கடந்த மாதம் \$3,500-டாலருக்கு விற்கப்பட்டிருந்த நிலையில், இன்று அது \$3,179 டாலராகவும், ஸ்பாட் விலையானது \$3,119.97 டாலராகவும் குறைந்துள்ளது.

இரண்டு நாட்களில் மட்டும் 2,000 ரூபாய்க்கு மேல் சரிவடைந்திருக்கிறது. இதுவே வெள்ளிக்கு பெரிய வாய்ப்பு என்பதே வல்லுனர்களின் கூற்று.

அதாவது இனி பளபளக்கும் தன்மையோடு பாயப்போகிற உலோகம் தங்கம் அல்ல… வெள்ளிதான்!

Latest news