‘தி கேரளா ஸ்டோரி’ கதை நிஜத்தில் எனக்கு நடந்திருக்கு! படத்தில் நடித்த ஹீரோயின் பகீர் தகவல்…

196
Advertisement

சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி, 200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அதா ஷர்மா, சில நாட்களுக்கு முன் அவருடைய செல்போன் நம்பர் morphing செய்யப்பட்ட photoவுடன் வெளியானதாகவும் கீழ்த்தரமான மனநிலை கொண்ட ஒருவர் இந்த வேலையை செய்துள்ளதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த செயல் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் ஒரு பெண்ணின் நம்பரை பொதுவெளியில் வெளியிட்டு அவமானப்படுத்தும் காட்சியை நினைவுபடுத்துவதாக பகிர்ந்துள்ள அவர், தன்னுடைய நம்பரை கசியவிட்ட நபர் நீண்ட நாட்களாக வேறு சில குற்ற செயல்களிலும் ஈடுபட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தனது செல்போன் எண்ணை மாற்ற வேண்டியிருப்பது, இந்த நபரை சிறையில் அடைக்க தான் கொடுக்கும் ஒரு சிறிய விலை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.