Thursday, May 8, 2025

பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பயன்படுத்தபட்ட விவகாரம் – மேயர் பிரியா போட்ட உத்தரவு

சென்னை புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேயர் பிரியா கலந்து கொண்டு அன்னதான உணவுகளை வழங்கினார்.

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தூர்நாற்றம் அதிகளவில் வீசியதால் அந்தப் பகுதியில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பை தெளித்தாகவும் பிளீச்சிங் பவுடர் வாசனையே இல்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ஆடு தொட்டியின் பின்பகுதி என்பதால் துர்நாற்றம் அதிகளவில் இருக்கிறது என்றும் புகார் குறித்து உரிய ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Latest news