Friday, March 28, 2025

சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்த ISS பூமியின் மேல் விழப்போகிறது! செயலிழந்த விண்வெளி நிலையம்!

சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்த சர்வதேச விண்வெளி நிலையம், 2031ஆம் ஆண்டில் தனது வேலையை முடிக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையம் அதாவது ISS 1998ல் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, விண்வெளித் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றிருப்பது ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

பூமியில் இருந்து சுமார் 400 – 415கி.மீ உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் 109 மீட்டர் நீளம் அதாவது ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு மற்றும் நான்கு லட்சம் கிலோவுக்கும் அதிகமான எடை அதாவது உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால் ஏறக்குறைய 80 ஆப்பிரிக்க யானைகளுக்கு சமமான எடை கொண்டது. இது 1998 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது.

நாற்பதுக்கும் மேற்பட்ட விண்வெளித் திட்டங்கள் மூலம் பூமியில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அவை விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்நிலையில் இந்தப் பிரமாண்டமான விண்வெளி நிலையம் செயலிழந்தால் என்ன நடக்கும்?

விண்வெளி நிலையம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் அதாவது பூமியின் மேற்பரப்பிலிருந்து வெறும் 415 கி.மீ உயரத்தில் சுற்றி வருகிறது. அப்படி இருக்கும்போது, அதன் பாகங்கள் பூமியில் விழுவது பூமிக்கு பேராபத்தாக முடியும்.

எனவேதான் Re-boost அதாவது விண்வெளி நிலையம் தொடர்ந்து செயல்படுவதற்கான உந்துதல் என்ற செயல்முறை தொடர்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செயலிழக்கச் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் நாசா கூறுகிறது. அதன் முதல்கட்டமாக ‘ரீ-பூஸ்ட்’ செயல்முறை குறைக்கப்படும்.

அவ்வாறு நிலையம் 120 கிலோமீட்டர் தொலைவை அடைந்தால் பூமியின் வளிமண்டலத்தை அது மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அதிபயங்கர வேகத்தில் தாக்கும். ஆனால், வளிமண்டலத்த்தின்  அதீத வெப்பத்தின் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும் என நாசா கூறுகிறது.

மீதமுள்ள பாகங்கள் பசிபிக் பெருங்கடலின் ‘பாயின்ட் நீமோ’ எனும் பகுதியில் விழும் என்பதாலும் அது மக்கள் வாழும் பகுதி இல்லை என்பதாலும் பொதுவாக தேவையற்ற விண்கலங்கள் இங்கு தான் விழவைக்கப்படுகின்றன என்பதாலும் எந்தப் பாதிப்பும் இருக்காது என்று நாசா கூறுகிறது.

Latest news