Monday, February 2, 2026

சிகரெட், புகையிலைப் பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி இன்று முதல் அமல்

சிகரெட், புகையிலைப் பொருட்கள், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால் வரியுடன் கூடிய 40 சதவீத ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இப்புதிய முறைப்படி பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டு ஜி.எஸ்.டி. வரி கணக்கிடப்படவுள்ளது.

சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ. நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு ரூ.2.10 வரையிலும், 70 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 4 ரூபாயும், 75 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 5.4 ரூபாய் அளவிலும் உயர்த்தப்படுகிறது. இது புதிதாக அமல்படுத்தப்படவுள்ள 40 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்த்து விதிக்கப்படும்.

மென்று தின்னும் புகையிலைக்கு 82 சதவீதம் கலால் வரியும் குட்காவுக்கு 91 சதவீதம் கலால் வரியும் பான் மசாலாவுக்கு 88 சதவீதம் கலால் வரிவிதிக்கப்பட உள்ளது. கிரிசில் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News