Wednesday, April 16, 2025

பட்ட கால்லயே படுதே ‘தோனியால்’ CSKவுக்கு வந்த ‘இடியாப்ப’ சிக்கல்

மும்பைக்கு எதிராக அசத்தலாகத் தொடங்கிய சென்னையை, அடுத்தடுத்து தோல்விகள் வரிசையாகத் துரத்தின. கிட்டத்தட்ட 5 தோல்விகளுக்கு பிறகு, லக்னோவை வீழ்த்தி சென்னை மீண்டும் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அடுத்த 7 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வென்றால் தான், சென்னையால் Play Offஐ நினைத்துப் பார்க்க முடியும்.

இந்தநிலையில் CSK கேப்டன் தோனியால் அணிக்கு, மீண்டும் பின்னடைவு ஏற்படலாம் என தெரிகிறது. தோனியின் வலது முழங்காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. என்றாலும் அவரால் வலது காலை இயல்பாக நகர்த்த முடிவதில்லை.

லக்னோவிற்கு எதிரான போட்டியில் சிங்கிள்கள் எடுக்கவே சிரமப்பட்டார். கீப்பிங்கின் போதும் வலது முழங்காலை பிடித்துக்கொண்டே இருந்தார். இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, போட்டிக்கு நடுவே, ”தோனியால் இயல்பாக கால்களை நகர்த்த முடியவில்லை.

அவரது வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இயல்பாக காலை அவரால் நகர்த்த முடியவில்லை. இதனை விரைவில் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் தோனி இருக்கிறார்,” என, சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

தோனியின் கீப்பிங் திறனில் குறை எதுவும் சொல்ல முடியாது. என்றாலும் காலில் தொடர்ந்து வலி ஏற்படும்போது, சில போட்டிகளில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்படலாம். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news