Wednesday, February 18, 2026

நடிகை சவுந்தர்யாவின் உயிரை பறித்த ஹெலிகாப்டர் : பகீர் தகவலை சொன்ன நடிகை மீனா

தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா. தமிழில் அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவர் 2003-ம் ஆண்டில் உறவினர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். கடந்த 2004 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தேர்தல் பிரச்சாரத்திற்காக நடிகை சவுந்தர்யா பெங்களூருவில் இருந்து தெலங்கானா மாநிலம் கரீம்நகருக்கு செஸ்னா-180 ரக சிறப்பு விமானத்தில் புறப்பட்டார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை சவுந்தர்யா மற்றும் அவரது சகோதரர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து சுமார் 21 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், நடிகை மீனா பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு நடிகை சவுந்தர்யாவின் உயிரை பறித்த ஹெலிகாப்டரில் தானும் செல்ல வேண்டியிருந்தது. என்னையும் அழைத்தனர். ஆனால்,சூழ்நிலை காரணமாக தவிர்த்து விட்டேன் என்ற பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.

Related News

Latest News