உக்ரைன் பெண்மணியின் மனதை உலுக்கும் சோகம்

295
Advertisement

உக்ரைன் போரில் பொது மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் அவர்களுடைய தைரியம் பற்றிய வீடியோக்கள் அதிகமாக  இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் போர் பதற்றத்துடன் உக்ரைனை உற்று நோக்கிக் கொண்டிருந்த சமயத்தில், ரஷ்யா எடுத்த எடுப்பிலேயே ஏவுகணை வீசி, உக்ரைன் தலைநகரில் உள்ள துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்து வருகிறது. தற்போது போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பெண்மணி ஒருவரின் கண்ணீர் வீடியோ உலக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.உக்ரைன் தலைநகர் கீவ்-வில் ஏவுகணை தாக்குதலால் நொறுங்கி விழுந்த தனது வீட்டின் கண்ணாடி துண்டுகளை சுத்தப்படுத்தும் பெண் ஒருவர், கண்ணீர் சிந்திய படியே உக்ரைன் தேசிய கீதத்தை பாடுகிறார்.

தனது நாட்டிற்கும், வீட்டிற்கும் ஏற்பட்ட நிலையை எண்ணி, கண்ணீர் சிந்தியபடி அவர் பாடும் தேசிய கீதத்தில் கணமான சோகம் இழையோடுகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.