கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதாமல் பெண்ணைக் காப்பாற்றிய காவலர்

216
Advertisement

ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தைக்
கடந்துகொண்டிருந்த பெண்ணைக் கண்ணிமைக்கும்
நேரத்தில் காப்பாற்றிய காவலர் பற்றிய வீடியோ
சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மும்பைப் புறநகர் ரயில் நிலையத்தில் இந்த
பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த ரயில் நிலையத்தில் ரயில் வந்துகொண்டிருப்பதைக்
கவனிக்காமல் ஒரு பெண் தண்டவாளத்தைக் கடந்துகொண்டிருக்கிறார்.
அருகே ரயில் வந்தும் அதை அறியாமல் அப்பெண் இருந்தாலும்,
சிசிடிவியில் அதைப் பார்த்துவிட்ட காவலர் உனடியாக
எஞ்ஜின் டிரைவரிடம் தகவல் கொடுத்தார்.

பின்னர், ஓடிச்சென்று அப்பெண்ணைத் தண்டவாளத்திலிருந்து
அப்புறப்படுத்தி காப்பாற்றினார்.

சமயோசிதமாக செயல்பட்டுப் பெண்ணின் உயிரைக்
காப்பாற்றிய காவலரை வலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

எவ்வளவுதான் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்,
சாலையைக் கடக்கும்போதும், தண்டவாளத்தைக் கடக்கும்போதும்
பொதுமக்கள் அலட்சியமாகவே உள்ளனர்.

சில விநாடிகள் நின்று இருபுறமும் கவனித்து
எந்த வாகனமும் வரவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டபின்
சாலை அல்லது தண்டவாளத்தைக் கடப்பது நல்லது.
சிலர் காதில் ஹெட்போன் பொருத்திக்கொண்டோ
செல்போனில் பேசிக்கொண்டே கடந்துசெல்கின்றனர்.

இத்தகைய தவறுகளைச் செய்யாமல் விபத்துகளிலிருந்து
இனியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும்.